Rabbana dua 40 tamil.and arabic

ரப்பனா rabbana duarabbana dua

அல்லாஹ் குர்ஆனில் கூறிய நாற்பது ரப்பனா தூஆக்கள்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ


எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதனை) நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ (எங்களின் வேண்டுதலை) செவியேற்கிறவன். எங்கள் நிலைகளை நன்கு அறிந்தவன்.2

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ


எங்கள் இறைவனே! எங்களை உனக்கு வழிப்படு கின்ற (முஸ்லிமான)வர்களாக நீ ஆக்கிவிடுவாயாக! எங்கள் சந்ததியிலிருந்து உனக்கு வழிப்படுகின்ற ஒரு (உம்மத்தை) சமுதாயத்தை ஆக்கிடுவாயாக! இன்னும் எங்களுக்கு (எங்களின் வணக்க வழிபாடுகளை) செய்முறைகளை அறிவித்துத் தருவாயாக! எங்களின் (தவ்பா) மன்னிப்பை ஏற்று எங்களை மன்னித் தருள்வாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன். மிக்க கிருபையாளன்.

رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதவ் வஃfபில் ஆஃகிரதி ஹஸனதவ் வகினா அதாபன்னார் (2:201


எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் அழகிய நற்பாக்கியத்தையும் இன்னும் மறுமையில் அழகிய நற்பாக்கியத்தையும் வழங்கி, நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காத்தருள்வாயாக!

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ


எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வாயாக! நிராகரிப்பாளர்களான (இக்)கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.

رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَ


எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து (குற்றம் செய்து) விட்டாலும் அல்லது நாங்கள் தவறு செய்து விட்டாலும் எங்களை நீ (குற்றம்) பிடித்து விடாதே!

رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ
رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ


எங்கள் இறைவனே! எங்களுக்கு எதில் சக்தி இல்லையோ அதனையும் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்களை விட்டும் (எங்கள்) பாவங்களை அழித்து விடுவாயாக எங்களை மன்னித்து விடுவாயாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே எங்கள் எஜமான். எனவே நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிந்தருள்வாயாக.

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ
رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ
رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ
رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَٰطِلًا سُبْحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ
رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍ
رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ
رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ


எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக! எங்களுடைய தீமைகளை எங்களை விட்டும் அழித்து விடுவாயாக! நல்லோர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக.

رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ
رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ

எங்கள் இறைவனே! நாங்கள் ஈமான் கொண்டோம். எனவே ( உன்னுடைய ரசூலும் உன் வேதமும் உண்மை என்று) சாட்சி கூறுவோருடன் எங்களையும் நீ பதிவு செய்திடுவாயாக!

رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةً مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ

ரப்பனா அன்ஜில் அலய்னா மாயிததம் மினஸ்ஸமாயி தகூனு லனா ஈதன்ல் லி அவ்வலினா வஆஹிரினா வஆயதம் மின்க வர்ஜுக்னா வஅன்த ஹைருர் ராஜிகீன் (5:114)

ரப்பனா
rabbana
رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ


எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவோம்.

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ
رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ

ரப்பனஃப்தஹ் பய்னனா வ பய்ன கவ்மினா பில் ஹக்கி வ அன்த ஃகைருல் ஃபாதிஹீன் (7:89)

ربَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ ; وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ



எங்கள் இறைவனே! அநியாயக்காரர் கூட்டத்தாரிடம் எங்களை சோதனையாக நீ சாட்டிவிடாதே! இன்னும் உன்னுடைய அருளால் நிராகரிப்போர் கூட்டத்தை விட்டும் எங்களை நீ காப்பாற்றுவாயாக!

رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ


எங்கள் இறைவனே! நாங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிவாய். பூமியிலும் வானத்திலும் எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ


ரப்பனா வதகப்பல் துஆ (14:40)

رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ
رَبَّنَآ ءَتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَآ أَوْ أَن يَطْغَى

ரப்பனா இன்னனா நஹாஃபூ அய் யஃப்ருத அலைனா அவ் அய் யத்ஹா

رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّـٰحِمِينَ

ரப்பனா ஆமன்னா பஃக்ஃபிர்லனா வர்ஹம்னா வஅன்த கைஞர்ராஹிமீன் (23:109)

எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) விசுவாசங் கொண்டோம். எனவே எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரிவாயாக. நீ அருள் புரிவோரிலெல்லாம் மிகச் சிறந்தவன்.

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَمُقَامً
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا

ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வதுர்ரிய்யாதினா குர்றத் அஃயுனின்வ் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா (25:74)

رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ
رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ
رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّـٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّـٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

எங்கள் இறைவனே! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள (அத்னு என்னும் நிலையான) கவனங்களில் அவர்களையும் அவர்களுடைய மூதாதையரிலும், அவர்களுடைய மனைவியரிலும், அவர்களுடைய சந்ததியரிலுள்ள சாலிஹானவர்களையும் நீ புகச் செய்வாயாக. நிச்சயமாக நீதான் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன், இன்னும் தீமைகளை (அதன் வேதனையை) விட்டும் நீ காப்பாற்றுகிறாயோ அவருக்கு திடமாக நீ அருள் செய்துவிட்டாய். இன்றும் அதுவே மகத்தான வெற்றியாகும்.

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ اٰمَنُوا

ரப்பனஃக்ஃபிர்லனா வலி
இஃக்வானினல்லதீன சபகூனா பில் ஈமானி வலா தஜ்அல் ஃபீகுலூபினா ஃகில்லல் லில்லதீன ஆமனூ

எங்கள் இறைவனே! எங்களையும் ஈமானில் எங்களுக்கு முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் நீ மன்னித்து விடுவாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதத்தை உண்டாக்கி விடாதே!

رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ

ரப்பனா இன்னக ரஊஃபுர்ரஹீம் (59:10)

எங்கள் இறைவா! நிச்சயமாக நீ இரக்கமுள்ளவன் மிக கிருபையுள்ளவன்.

رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ


எங்கள் இறைவனே! உன் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். உன் பக்கமே நாங்கள் மீண்டோம். (நாங்கள்) திரும்பி வருதலும் உன் பக்கமேயாகும்.

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ


எங்கள் இறைவனே! உன்னை நிராகரித்து விட்டவர்களுக்குச் சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே! எங்களை மன்னித்து விடுவாயாக. எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் யாவற்றையும் மிகனத்தவன், ஞானமுள்ளவன்.

رَبَّنَآ أَتۡمِمۡ لَنَا نُورَنَا وَٱغۡفِرۡ لَنَآۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ


எங்கள் இறைவனே! எங்கள் ஒளியை எங்களுக்கு நிரப்பமாக்கி வைத்து எங்களை மன்னித்து விடுவாயாக. நிச்சயமாக நீ எல்லா வஸ்துக்களின் மீதும் சக்தி பெற்றவன்
துஆ முடிவில்


சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸதி அம்மா யஸீஃபூன் வஸலாமுன் அலல் முர்ஸலீன் வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
தூய்மையான இறைவனாகிய உம்முடைய இறைவன் அவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் மகாத் தூய்மையானவன். ரஸூல்கள் மீது ஸலாம் உண்டாவதாக, புகழ் அனைத்தும் அனைத்து உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு உரித்தாகும். ஆமீன்! ஆமீன்!! யாரப்பல்