اول كلمه طيبة
لا إله إلا الله محمد رسول الله
லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மத்துர்ரஸூலுல்லாஹ்
ارنذام كلمه شهادة
اشهد ان لا إله إلا الله وحده لا شريك له و اشهد ان محمد عبده ورسوله
இரண்டாம் கலிமா ஷஹாதத்
அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரிகல ஹூ வஅஷ்ஹது அன்ன முஹம் மதன் அப்துஹூ வரஸூலுஹூ
பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூரல்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்
مونرام كلمه تمجد
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله العلي ااعظيم
- கலிமா தம்ஜீது
சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹௌல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
نانكام كلمه توحد
பொருள்: மூன்றாம் கலிமா தூய்மைப்படுத்துதல்
அல்லாஹ் பரிசுத்தமானவன். மேலும் எல்லாப் புகழும் அல்லாஹுத்தஆலாவிற்கே உரியன. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹுத்தஆலா மிகப் பெரியவன், பாவத்தை விட்டும் தவிழ்த்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோணும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحي ويمت بيديه الحير وهو علي كلي شي قدير

- கலிமா தவ்ஹீது
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயெமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.
பொருள்: நான்காம் கலிமா ஒருமைப்படுத்துதல்
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. எல்லா அரசாட்சிகளும் அவனுக்கே உரியன, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. அவனே படைப்பினங்களை உயிர்ப்பிக்கவும், மர்ணிக்கவும் செய்கிறான். அவன் என்றும் நிலைத்திருப்பவன். நலமனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தி வாய்ந்தவன்.
ايدام كلمه رد كفر
إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أنْ أشْرِكَ بِكَ شَيَّا وَ أَنَا أَعْلَمُ بِهِ وَاسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ بِهِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّ أَتُ مِنَ الكُفْرِ وَالشِّرْكِ وَالكِذَّبِ وَالمُعَاصِي كُلِّهَا أَسْلَمْتُ وَآمَنْتُ وَأَقُولُ لا إلهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ
கலிமா ரத்துல் குஃப்ர்
அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅவ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரத்து மினல்லகுஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.
பொருள்: ஐந்தாம் கலிமா இறைமறுப்பை நீக்குதல்
யா அல்லாஹ் நான் அறிந்தவனாக இருக்கும் நிலையில் உன்னைக் கொண்டு எந்த வஸ்துவையும் (இணை வைப்பதை) விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோறுகிறேன். நான் அறியாமல் எக்குற்றம் என்னில் நிகழ்ந்ததோ, அதற்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். அக்குற்றத்தை விட்டும் நான் தவ்பா செய்து (இனி ஒரு போதும் அதை செய்வதில்லை என்ற உறுதியுடன்) மீன்டேன்.
மேலும் இறை மறுப்பு இணை வைத்தல் இன்னும் எத்தனை வகை (மாறுபாடான) பாவ செயல்கள் இருக்கின்றனவோ அவைகளை விட்டும் நீங்கி விட்டேன். நான் இஸ்லாமானேன், ஈமான் கொண்டேன், வணக்கத்திற்குரியவன் இறைவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கிறேன்.
?இஸ்லாம் என்றால் என்ன
ஒருவன் தன்னை முழுமையாக தனது ஒப்படைத்து விட்டு தன்னிலே அவனின் தன்மைகளை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்குப் பெயர் இஸ்லாம் ஆகும். அவ்வாறு ஒப்படைத்தவருக்குப் பெயர் முஸ்லிமாகும். இதன் அடிப்படையில் ஒருவர் முஸ்லிமாக ஆக வேண்டும் என்று விரும்பினால் அவர், “லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று சாட்சியமளிக்க வேண்டும். தொழ வேண்டும். ஸகாத் கொடுக்க வேண்டும். நோன்பு மாதம் நோன்பிருக்க வேண்டும். வசதியுள்ளவர் ஹஜ் செய்ய வேண்டும். இவையே இஸ்லாத்தின் தூண்களாகும்.
இஸ்லாம் என்றால் என்னவென்பதற்குக் கூறப்பட்ட அம்சங்களில் “லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்பது முன்னிலை வகிக்கிறது.
“லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்பதை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிற கடமைகளில் எந்தவொன்றையும் அது தனக்கு கடமையில்லை என்று மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுத்தால் மதம் மாறியவராகக் கருதப்படுவார். ஆனாலும் அக்கடமைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஒருவர்,அக்கடமைகளை அவர்நிறைவேற்றாது இருக்கின்றார் என்றால், அவரை அல்லாஹ் விரும்பினால் மன்னிப்பான். விரும்பினால் தண்டிப்பான். ஆனால், “லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்பதை ஏற்க மறுத்தவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு என்பதேஇல்லை. அவர் நிரந்தர நரகவாதியாவார்.
“லா
கலிமாவின் பொருள்
இலாஹ இல்லல்லாஹ்” என்பது திருமறை வசனமாகும். இதற்கு “கலிமதுன் தய்யிபதுன்” என்றும் “கலிமதுத் தவ்ஹீத்” என்றும் சொல்லப்படும். இது எல்லா நபிமார்களும் சொன்ன வார்த்தையுமாகும். “அல்லாஹ் தவிர இலாஹே இல்லை” என்பது இதற்கான நேரடிக் கருத்தாகும். அதாவது,“வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தவொரு இலாஹும் இல்லை” என்பது இந்தக் கலிமாவின் விளக்கமாகும்.
“லா இலாஹ இல்லல்லாஹ் அல்லாஹ் தவிர எந்தவொரு இலாஹும் இல்லை” என்று அல்குர்ஆனில் கூறப்பட்டிருப்பது போல,
“அவனையன்றி இலாஹில்லை”
“அவனையன்றி இலாஹு உங்களுக்கில்லை”
“அவனையன்றி இலாஹுயார்?”
“என்ன? அல்லாஹ்வுடன் வேறு இலாஹ் உண்டா?”
“உன்னையன்றி வேறு இலாஹில்லை”
لا إله إلا هو
مالكم من إله غيره
من إله غيره
أإله مع الله
لا إله إلا أنت
لا إله إلا أنا
“என்னையன்றி இலாஹில்லை”உன்னையன்றி இலாஹில்லை”
لا إله غيرك
أم لهم إله غير الله
“அல்லாஹ் தவிர இலாஹ் அவர்களுக்கு உண்டா?”
இவ்வாறு இன்னும் பல இடங்களில் “அல்லாஹ் அன்றி இலாஹே இல்லை” என்று அல்குர்ஆனும் அல்ஹதீதும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன.