சலாத்துன் நாரிய்யா

Written by

Table of Contents

சலாத்துன் நாரிய்யாபலன்கள்

நாட்டங்கள் நிறைவேற நல்லதோர் ஸலவாத் ஸலவாத்துன் நாரியா

உலகத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் அற்புதமான ஸலவாத்
ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் 11 முறை ஓதிவந்தால் அறியாப் புறத்திலிருந்து செல்வம் வந்து சேரும் இரணம் அதிகரிக்கும் துன்பங்கள் சோதனைகள் விலகும்

இதை ஓதக்கூடியவரின் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் கொள்வார்கள் படைப்புகள் யாவும் பிரியம் கொள்ளும்

மன அழுத்தத்திற்கு 40 நாள் தொடர்ந்து ஓதினால் நல்ல பலன் கிடைக்கும்

பிரசவ காலத்தில் உள்ளவர்கள் இதை ஓதினால் சுகப்பிரசவம் ஏற்படும்

ஹாஜத்துக்கள் நிறைவேற இந்த ஸலவாத்தை 4444 தடவை தனியாகவோ கூட்டாகவோ ஓதி முடித்தால் நினைத்த காரியம் கைகூடும்

دُرُودِ نَارِيَهُ

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

اللَّهُمَّ صَلِّ صَلَاةً كَامِلَةً وَسَلَّمْ سَلَاماً تَامّاً عَلَى سَيِّدِنَا مُحَمَّدِهِ الَّذِي تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضَى بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيمِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ فِي كُلِّ لَمْحَةٍ وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ لَكَ

சலாத்துன் நாரிய்யா

அல்லாஹும்ம சல்லி சலாத்தன் காமிலத்தன், வ சல்லிம் சலாமன் தாம்மன், அலா சய்யிதினா முஹம்மதின், அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத், வ தன் பரிஜு பிஹில் குரப், வ துக்லா பிகில் ஹவாயிஜூ, வ துனாலு பிகி ரகாயிபு. வ ஹுஷ்னுள் ஹவாதிம், வ யுஸ்தஷ்கள் கமாமு, பி வஜ்ஹிஹில் கரீம்.வ அலா ஆலிஹி வசஹபிஹி பீ குல்லி லம்ஹத்தின் வ நப்சின் பி அததி குல்லி மஹ்லூமின் லக.

அல்லாஹ்வே எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மது எப்படி பட்டவரென்றால் அவர் மூலமாகத்தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம்தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம்தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்று கொள்ளப் படுகின்றன. அவருடைய திரு முகத்தின் மூலம்தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *